காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீயில் சிக்கி தனியார் ஊழியர் படுகாயம்
2021-02-19@ 00:09:51

குன்றத்தூர்: டீ போடுவதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்தபோது, தனியார் நிறுவன ஊழியர் தீப்பிடித்து படுகாயமடைந்தார். மாங்காடு அடுத்த மதனந்தபுரம், மகாலிங்கம் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (60). தனியார் நிறுவன ஊழியர். நேற்று அதிகாலை முருகேசன், தனது வீட்டில் டீ போடுவதற்காக சமையலறைக்கு சென்றார். அங்கு, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, சமையலறை முழுவதும் காஸ் பரவியது. இதை அறியாமல், அவர் டீ போடுவதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தார். இதில், திடீரென தீப்பற்றியது. அவரது உடலில் பற்றிய தீ, வீடு முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் முருகேசன் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், மிக்சி, வாஷிங் மெஷின் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. புகாரின்படி மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்