SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேஸ்புக்கில் செய்திகளை பகிர்வதற்கு கட்டணம் வசூலிக்கும் ஆஸ்திரேலியாவின் திட்டம் எதிரொலி : செய்திகளை படிக்கும், பகிறும் வசதிகளை முடக்கியது நிறுவனம்

2021-02-18@ 12:36:20

சிட்னி : ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் அந்நாட்டில் வெளியாகும் செய்திகளை பார்க்கும், பகிறும் வசதிகளை அந்நிறுவனம் முடக்கி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து செயல்படும் செய்தி நிறுவனங்களால் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் ஆதாயம் அடைந்து வருவதாக ஆஸ்திரேலியா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எனவே சமூக மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் நாட்டு நிறுவனங்களின் செய்திகளை பகிர கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியா பயனாளிகள் அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகளை பார்க்கும் பகிரும் வசதிகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது. இதனால் பேஸ்புக் மூலம் செய்திகளை பார்க்க முடியாத நிலைக்கு, ஆஸ்திரேலியா மக்கள் ஆளாகி உள்ளனர். பேஸ்புக் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது

. இது குறித்து கருத்து தெரிவித்த நிதித்துறை செயலர் ஜோஸ்,'பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது. செய்தியை படிக்கும் பகிறும் வசதிகளை முடக்கி இருப்பது தேவையில்லாத நடவடிக்கை. இது ஆஸ்திரேலியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாக இருக்கிறது,' என்றார். பேஸ்புக்கின் நடவடிக்கையால் கோவிட் 19 கிருமி தொற்று, காட்டுத் தீ, சூறாவளி, அவசர நிலை ஆகியவற்றை பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் பல்வேறு முக்கிய தனியார் நிறுவனங்களின் பக்கங்களும் முடங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பேஸ்புக் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசின் உயர் அதிகாரிகள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்