SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனவரி மாதத்தின் சிறந்த வீரர் ரிஷப் பன்ட் :ஐசிசி அறிவிப்பு

2021-02-10@ 13:52:33

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதையடுத்து, ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையாக இந்திய  விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்,  அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்ரிங் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் விளாசிய ரிஷப்பன்ட் பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து, ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராக ரிஷப்பன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐசிசி, கிரிக்கெட் வர்ணனையாளர்கள், ரசிகர்கள், கிரிக்கெட் பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள், ஒளிபரப்பாளர்கள் எனப் பலரும் ஆன்லைனில் வாக்களித்தனர். இவர்கள் அனைவருக்கும் 90 சதவீத வாக்குகளும், ரசிகர்களுக்கு 10 சதவீத வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது இதன் அடிப்படையில் ரிஷப் பன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசியின் சிறந்த மாதாந்திர வீரராக தேர்வு செய்யப்பட்டது குறித்து ரிஷப் பன்ட் கூறுகையில் “எந்த வீரருக்கும், அணியின் வெற்றிக்கு பங்களிப்பதே சிறந்த உட்சபட்ச விருது. ஆனால், ஐசிசியின் இதுபோன்ற மாதாந்திர விருதுகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, என்னை ஒவ்வொரு முறையும் சிறப்பாக விளையாட ஊக்கமாக இருக்கும். இந்த விருதை இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் அர்ப்பணிக்கிறேன். எனக்கு வாக்களித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என்றார். இதுபோல் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியின் ஷப்னிம் இஸ்ெமயில் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் தொடரில் 7 விக்கெட்டுகளை இஸ்மெயில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்