SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 கிலோ மட்டன் + வறுத்த மீன்... ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசு!

2021-02-09@ 15:17:29

நன்றி குங்குமம்

ம்ஹும். இது பொன்ராம் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் காட்சியல்ல! புனேவில் இருக்கும் ஒரு ஹோட்டலின் அறிவிப்பு இது.புனேவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார் அதுல் வாய்கர். இங்கு பிரமாண்ட தட்டுகளில் வழங்கப்படும் அசைவ ரகங்கள் வெகு பிரபலம். ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு, மால்வானி மீன் சாப்பாடு உள்ளிட்ட 6 வகை உணவு வகைகள் இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ரக உணவும் ரூ.2,500 மதிப்புடையது. கொரோனா காரணமாக வாடிக்கையாளர்களின் வரவு குறைந்தது. எனவே தொழிலை மேம்படுத்த 4 கிலோ எடை கொண்ட புல்லட் தாலி என்னும் உணவு பிளேட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால் ராயல் புல்லட் பைக் பரிசாக வழங்கப்படும் என்று அதுல் அறிவித்தார்.

புல்லட் தாலி என்பது காய்கறி எதுவும் இல்லாத தட்டு. இதில் 4 கிலோ மட்டன் மற்றும் வறுத்த மீன்களுடன் தயாரிக்கப்பட்ட சுமார் 12 வகையான உணவுகள் இருக்கும். வறுத்த மீன், பொம்ஃப்ரெட் வறுத்த மீன், சிக்கன் தந்தூரி, மட்டன் சுக்கா, மட்டன் கிரேவி, சிக்கன் மசாலா மற்றும் இறால் பிரியாணி உள்ளிட்ட உணவுகள் தட்டு நிறைய இருக்கும்.

55 சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பிரமாண்ட உணவு ரகங்களை தயார் செய்கிறார்கள்.ஒரு மணி நேரத்தில் இந்த தட்டை காலி செய்தால் ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாகக் கிடைக்கும்!அறிவிப்பு வெளியானதுமே பல இளைஞர்கள் அதுல் வாய்கர் அறிவித்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முயன்றனர். ஆனால், ஒரே ஒருவர்தான் வெற்றி பெற்றுள்ளார். சோலாப்பூரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் சோம்நாத் பவார்.

எனினும், விடா முயற்சியாக ஒரு தட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிட பல இளைஞர்கள் முயற்சித்து வருகின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக அதுல் வாய்கர் ரெஸ்டாரன்ட்டில் எப்போதும் 5 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு குறைந்தது 65 பேர் இந்த பிரமாண்ட உணவுத் தட்டை காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சவாலில் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஃப்ளைட் பிடித்தோ அல்லது ரயிலில் ஏறியோ புனே செல்லுங்கள். அதுல் வாய்கர் நடத்தும் ஹோட்டலுக்குச் சென்று போட்டியில் கலந்து கொள்ளுங்கள். புல்லட் தாலியை ஒரு மணி நேரத்தில் காலி செய்து புல்லட்டை பரிசாகப் பெற்று அதில் ஊருக்குத் திரும்புங்கள். ஆல் த பெஸ்ட்!

நிரஞ்சனா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்