SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹெல்மெட் விவகாரத்தில் கெடுபிடி: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மாற்றப்படுவாரா?...மத்திய உள்துறையில் பாஜ பரபரப்பு புகார்

2021-02-04@ 21:42:22

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கடந்த 18 மாதங்களுக்கு முன் மத்திய  அரசு கொண்டு வந்தது. அப்போது புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டதால்,  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்காங்கே போராட்டம் நடைபெற்றதால், முதல்வர் தலையிட்டு  ஹெல்மெட் அணிவதை படிப்படியாக கொண்டுவர வேண்டும். பொதுமக்களிடம் கட்டாயமாக திணிக்க கூடாது.  போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரே அமல்படுத்த வேண்டுமென போலீஸ் உயரதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். இதனால் போலீசாரின் கெடுபிடி குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதற்கிடையே திருத்திய மோட்டார் வாகன சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக  கண்காணிப்புக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து கவர்னர்  கிரண்பேடி இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டார். போக்குவரத்து அமைச்சர் ஷாஜகானிடம் பல மாதங்களாக  கிடப்பில் கிடந்த மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கோப்பின் அடிப்படையில் கவர்னர், தன்னிச்சையாக  அரசாணையாக வெளிவந்தது.

இதனை தொடர்ந்து களத்தில் குதித்த போலீசார் ஹெல்மெட் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். இரு  சக்கர வாகன ஓட்டிகளை மடக்கி அதிகபட்சமாக ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுவதுடன், ஓட்டுனர் உரிமம் ரத்து  செய்யப்படும். அதேபோல் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் ரூ. 5 ஆயிரம் என கிடுக்கிப்பிடி  நடவடிக்கையில் இறங்கினார். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டதோடு, போலீசாரை கண்டிக்கும் வகையில் நடுத்தெருவில் துண்டை விரித்து சில்லரை  காசுகளை போட்டு இதனை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் என நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசாரின் இந்த அடாவடி வசூலுக்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்னும் சில  மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மத்திய பாஜக அரசுக்கு எதிராக திசை திரும்பியது.  எப்படியாவது வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் இருக்கும் பாஜகவுக்கு கவர்னரின் இந்த நடவடிக்கை  பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே கவர்னர் மத்திய பாஜக அரசின் ஏஜெண்ட் என ஆளுங்கட்சி குற்றம்  சாட்டியதால், முழு பழியும் தங்கள் மேல் வந்துவிடும் என பாஜக மிரண்டு போய் இருக்கிறது.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்துக்கு கொண்டு சென்றனர். உடனடியாக கவர்னரை சந்தித்து மனு  கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை பாஜக தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்,  துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்டோர் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் தேர்தல் நேரத்தில் இதே  துணை நிலை ஆளுநரை வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் எனவும் பாஜக  தேசிய தலைமையிடம் புகார் கூறப்பட்டுள்ளன. ஏற்கனவே கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக 5 முறை புதுச்சேரி பாஜக  புகார் தெரிவித்திருந்தது. தற்போது ஹெல்மெட் விவகாரத்திலும் கவர்னர் மீது உள்துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.  இந்த விவகாரத்தில் இன்னும் இரண்டு நாளில் முடிவு கிடைக்கும் என பாஜக தலைவர் சாமிநாதன் நேற்று நடந்த  பேட்டியில் கூறியுள்ளார். இதனால் புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகி  வருகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sudan-26

  சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!: பிரதமர், அமைச்சர்கள் கைது..மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்..!!

 • karnataka-schools-25

  20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

 • wheel-uae-25

  250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்