ஒருங்கிணைந்த மருத்துவ முறையினை எதிர்த்து கற்பக விநாயகா மருத்துவ கல்லூரியில் டாக்டர்கள் உண்ணாவிரதம்
2021-02-04@ 00:08:30

மதுராந்தகம்: ஒருங்கிணைந்த மருத்துவ முறையை எதிர்த்து, கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை எதிர்த்து, டாக்டர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சின்னகொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி வளாகத்தில், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில், ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருத்துவத்தை இணைந்து கொண்டு வந்துள்ள, ஒருங்கிணைப்பு மருத்துவ முறையினை எதிர்த்து டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதில், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜா.ஜெயபால் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி வரவேற்றார். கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அன்பரசு, மாநில செயலாளர் ரவிக்குமார், முன்னாள் தேசிய தலைவர்கள் அருள்ராஜ், விஜயகுமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாசம், முன்னாள் மாநில செயலாளர் முத்துராஜ், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் மதுராந்தகம் கிளை நிர்வாகி கலியபெருமாள் ஆகியோர் முன்னிலையில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Tags:
Integrated Medical System Resistance Karbhaka Vinayaka Medical College Doctors Fasting ஒருங்கிணைந்த மருத்துவ முறை எதிர்த்து கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் உண்ணாவிரதம்மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்