நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்..: சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்ததாக ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்
2021-02-02@ 12:41:13

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்துக் கொண்டார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப். 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும் செய்திகள்
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய போது: சோழர் காலத்து 7 உறை கிணறு கண்டுபிடிப்பு
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்