செய்யூரில் திமுக பொதுக்கூட்டம் 120 நாளில் அதிமுக ஆட்சி ஆயுள் முடியும் : ஆர்.எஸ்.பாரதி எம்பி பேச்சு
2021-01-30@ 17:39:26

செய்யூர்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் திமுக சார்பில், அதிமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் செய்யூர் திரவுபதி அம்மன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். லத்தூர் ஒன்றிய அமைப்பாளர்கள் கேஎஸ். ராமச்சந்திரன், எம்எஸ்.பாபு வரவேற்றனர். மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன் முன்னிலை வகித்தனர்இந்த கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி எம்பி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் ஆர்எஸ்.பாரதி பேசியதாவது;
தமிழகத்தில் இன்னும் 120 நாட்கள் மட்டுமே அதிமுக ஆட்சி நடைபெறும். கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். அவர் மக்களுக்கான ஆட்சியை நடத்தினார்.டெல்லிக்கு சென்ற எடப்பாடி, ஜெயலலிதா நினைவிடம் திறக்க மோடி, அமித்ஷா ஆகியோரை அழைத்தார். ஏன் அவர்கள் விழாவுக்கு வரவில்லை. தண்டனை பெற்றவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் இவர்களுக்கு சட்டச் சிக்கல் வரும் என்பது தெரியும்.இவ்வாறு பேசினார்.
இந்த கூட்டத்தில் க.செல்வம் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் ஆர்டி.அரசு, எழிலரசன், நிர்வாகிகள் ராமலிங்கம், ஆறுமுகம், கே.குமார், பி.எம்.குமார், ஸ்ரீதரன், கண்ணன், ஞானசேகரன், சேகர் டி.குமார், குமணன், சத்யசாய், ஏழுமலை, தம்பு, சரவணன், சிற்றரசு, பூபாலன், அப்துல்மாலிக், செய்யூர் ஆசிரியர் கே.டி.ஆர்.தியாகராஜன், பால்ராஜ், அருண் மொழிவர்மன், டைகர் குணா, மோகன்தாஸ், கினார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:
ஆர்.எஸ்.பாரதிமேலும் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்
தமிழ்நாடு வார்த்தையை பயன்படுத்தி முதல்வரின் உருவம் வரைந்த அரசு கல்லூரி மாணவி: பாராட்டுகள் குவிகிறது
நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கு மேற்பட்டுள்ள தன்னார்வலர்கள்
பள்ளி பேருந்து ஏரியில் கவிழ்ந்து 22 மாணவர்கள் படுகாயம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!