கோவை- நாமக்கலுக்கு ஹெலிகாப்டர் சேவை -சோதனை ஓட்டம் தொடங்கியது
2021-01-28@ 13:58:24

நாமக்கல் : நாமக்கல்-திருச்சி ரோடு ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி வளாகத்தில், நேற்று மாலை ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. பின்னர், சற்று நேரத்தில் அங்கு தரையிறங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மக்கள் அங்கு வந்து ஹெலிகாப்டர் அருகில் நின்று செல்பி எடுத்து கொண்டனர். நாமக்கல் காவேரி நகரில் உள்ள அலுவலக முதல் மாடியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனம், விரைவில் கோவை, நாமக்கல் இடையே ஹெலிகாப்டர் சேவையை தொடங்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
முதல் பயணமாக கோவையை சேர்ந்த ஒரு தொழிலதிபர், இந்த ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். நாமக்கல்லில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவரது மகளை அழைத்து கொண்டு, ஒரு மணி நேரத்தில் அதே ஹெலிகாப்டரில் கோவை திரும்பினார். இதற்காக ஒரு மணி நேரம், பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டரை நாமக்கல் வானில் அதிகம் பார்த்திராத மக்கள், திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லை - சென்னை: அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்சி ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு; கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்..!
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்: தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: நெல்லை ஆட்சியர் பேட்டி.!!!!
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்..!
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!