வடகிழக்கு டெல்லி கலவரம் 5 வழக்குகளில் தொடர்புள்ள வாலிபருக்கு ஜாமீன்
2021-01-28@ 00:49:17

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் 5 வழக்குகளில் தொடர்புடைய வாலிபருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் கோகுல்புரி பகுதியில் நடந்த கலவரத்தில் 24 வயது வாலிபர் ஆசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 வழக்குகள் பதியப்பட்டன. இது தொடர்பாக 2 போலீஸ் சாட்சிகள் சேர்க்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினோத் யாதவ் முன்னிலையில் நடந்தது. அப்போது ஆசாத் மீது போலீசாரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போதுமான சாட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து ஆசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
கவர்னர் தமிழிசை நேரடி கவனிப்பு: 31 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்...ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்!!!!
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்