SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகர செய்தி துளிகள்...

2021-01-28@ 00:36:22

* மது விற்ற 4 பேர் கைது: கிண்டி டாஸ்மாக் அருகே குடியரசு தினமான நேற்று முன்தினம் மது விற்ற சரவணனை(24) அடையாறு தனிப்படை போலீசார் கைது செய்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் நீலாங்கரை வெட்டுவாங்கேணி பகுதியில் ஒரு வீட்டில் மதுபானங்களை விற்ற நாகவல்லியை(36) கைது செய்து 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், சைதாப்பேட்டை சிஐடி நகரில் மது விற்ற சஞ்சய்(24), கேசவனை(25) தனிப்படையினர் கைது செய்து 50 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்ற ₹17,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
* வாலிபர் தற்கொலை: பெரவள்ளூர் வெற்றி நகர் சிவப்பிரகாசம் தெருவை சேர்ந்தவர் தாமோதரன்(25). இவருக்கு வேலை ஏதும் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* நகை திருடிய பெண்ணுக்கு வலை:  கொடுங்கையூர் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(32). திருவிக நகர் எஸ்ஆர்பி கோயில் தெருவில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை இவரது கடைக்கு வந்த பெண் கம்மல் வாங்குவதுபோல் நடித்து ஒரு சவரன் மதிப்புள்ள இரண்டு கம்மல்களை திருடிச்சென்றார். இதுகுறித்து புகாரின்பேரில் திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  நகைக்கடையில் நூதன முறையில் நகை திருடிய பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.
* பேருந்தில் இருந்து கீழே விழுந்து முதியவர் பலி: ராயபுரம் ஆதாம் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம்(62). நேற்று காலை எண்ணூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு (தடம் எண் 1 சி) மாநகர பேருந்தில் வீடு திரும்பினார். திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பு அருகே வந்தபோது படிகட்டு அருகே நின்றிருந்த அவர் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் ஓட்டுனர் சுப்ரமணியை(59) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-03-2021

    03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-party-2

    கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!

  • priyanka-2

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்

  • 02-03-2021

    02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-modi1

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்