டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
2021-01-28@ 00:32:09

மதுராந்தகம்: இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், குடியரசு தினத்தன்று அமைதியான முறையில் டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தவிடாமல் காவல் துறையினர் அராஜக அடக்குமுறையை கண்டித்து நேற்று வேடந்தாங்கலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அச்சிறுப்பாக்கம் வாலிபர் சங்க ஒன்றிய இணை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.
வாலிபர் சங்க அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் கே.அசோக் கண்டன உரை ஆற்றினர். நிறைவாக ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மு.தமிழ் பாரதி உரையாற்றினார். இதில், வேடந்தாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யூர் வட்ட கிளை சார்பில், சோத்துபாக்கம் மேம்பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவி அனைவரையும் வரவேற்றார். இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:
Delhi Farmers Attack Condemnation Indian Students Association Demonstration டெல்லி விவசாயிகள் தாக்குதல் கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்மேலும் செய்திகள்
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் ரெங்கசாமி முன்னிலையில் இணைந்தார் லட்சுமி நாராயணன்
ராசிபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியா?: பாஜக சுவர் விளம்பரத்தால் அதிமுகவினர் கடும் அதிருப்தி..!!
தேர்தல் நடத்தை விதி எதிரொலி!: கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 2.93 லட்சம் பறிமுதல்...தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் எவ்வளவு? கூட்டுறவு வங்கிகளுக்கு சுற்றறிக்கை
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அதிகாரிகளுடன் அளுநர் தமிழிசை 2-வது முறையாக ஆலோசனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்