முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் முன்னிலை
2021-01-28@ 00:31:21

கராச்சி: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது. தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 220 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், முதல் நாள் ஆட்ட முடிவில் 33 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. அசார் அலி 5, பவாத் ஆலம் 18 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்தது. அசார் அலி 51 ரன், ரிஸ்வான் 33 ரன் எடுத்து வெளியேற, ஆலம் 109 ரன் விளாசி பெவிலியன் திரும்பினார். பாஹீம் அஷ்ரப் 64 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்துள்ளது. ஹசன் அலி 11, நவுமன் அலி 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 2 விக்கெட் இருக்க, பாக். 88 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
மேலும் செய்திகள்
3வது டெஸ்ட் போட்டி: அக்சர், அஷ்வின் சுழலில் மூழ்கியது இங்கிலாந்து: இந்தியா நிதான ஆட்டம்
விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்
சில்லி பாயின்ட்...
இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரில் முன்னிலை பெற இந்தியா முனைப்பு: அகமதாபாத்தில் பகல்/இரவு பலப்பரீட்சை
தினமும் 4 மணிநேரம் பயிற்சி: ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் ஓய்வு பெற விரும்புகிறேன் : சானியா மிர்சா பேட்டி
சில்லி பாயின்ட்...
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்