ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
2021-01-28@ 00:31:01

சென்னை: ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு அதிமுக தொண்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.வெளியூரில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தவும், அதிமுக தொண்டர்கள் நினைவிடத்திற்கு எந்த சாலை வழியாக வர வேண்டும் என்பது குறித்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதனால் சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டது. ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணிக்கு திறந்து வைத்த பிறகு, மதியம் 12 மணிக்கு மேல் தொண்டர்கள், பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர்.
இந்த நிலையில், ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள பகுதிக்கு அருகே ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு மயங்கிய நிலையில் ஒருவர் கிடந்தார். அவரை மயிலாப்பூர் போலீசார் மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனாலும் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவசரமாக அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சிறுகுடி பகுதியை சேர்ந்த மூக்கன் (60) என்பது தெரியவந்தது.
அவரது இறப்பு குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த நபர் அதிமுக கரை வேட்டி கட்டியுள்ளார். அதனால் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்தபோதுதான் இறந்துள்ளது உறுதியாகி உள்ளது. அதேபோன்று, ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு திண்டுக்கல்லில் இருந்து சென்னை மெரினா நோக்கி பேருந்தில் வந்த அதிமுக தொண்டர் ஒருவர் கிண்டி அருகே வந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை அதே பேருந்தில் போலீசார் திண்டுக்கல்லுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
Tags:
Jayalalithaa memorial show pity crowd trapped one person killed ஜெயலலிதா நினைவிடம் நிகழ்ச்சி பரிதாபம் கூட்ட சிக்கி ஒருவர் உயிரிழப்புமேலும் செய்திகள்
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை
மெட்ரோவில் பிப்ரவரி மாதம் 20 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்
தேர்தல் சிறப்பு பணியில் இருந்து கோயில் செயல் அலுவலர்களுக்கு விலக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம்
கொரோனா பரவலை தடுக்க தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க குழு: சுகாதாரத்துறை வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் தேர்தல் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை: காவல் துறை உத்தரவு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்