SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஜெயலலிதாவுக்கு அழகான நினைவிடம் அமைப்பு: எம்ஜிஆர் நினைவிடமும் புதுப்பிக்கப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

2021-01-28@ 00:30:49

சென்னை: ஜெயலலிதாவின் அருமை, பெருமைகளை எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ளும் வகையில் அழகான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் நினைவிடமும் புதுப்பிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.
ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதினைந்தரை ஆண்டு காலம் ஆட்சி புரிந்து, வரலாற்றில் 36 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா.

இரும்பு மங்கை என்று பெயர் பெற்றவர், எதிரிகளாலும் தைரியசாலி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு, தொழில் துறை, விவசாயம், நீர் மேலாண்மை, மீனவர் மேம்பாடு, எரிசக்தி மேம்பாடு, இளைஞர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், ஆதிதிராவிடர் நலன், விளையாட்டு வீரர்கள் நலன் என அனைத்து துறைகளிலும் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார்.

இத்தகைய மாபெரும் மக்கள் தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஜெயலலிதாவின் தன்னலமில்லா வாழ்விற்கு பொருத்தமாக மெரினா கடற்கரையில் இந்த மிகப்பெரிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான நினைவு மண்டபம் அமைக்க உலகளாவிய கட்டிட கலை நிபுணர்களிடம் இருந்து வரை படங்களை பெற்று, எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர் குழு மூலம் வரை படங்களை தேர்வு செய்து குறித்த காலத்திற்குள் இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிடவும், இங்கே அழகான நினைவிடத்தை ஜெயலலிதாவுக்கு அமைத்திருக்கின்றோம். இந்த நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அப்பணித்திருக்கின்றேன். எம்ஜிஆர் நினைவிடமும் புதுப்பிக்கப்படும். ஜெயலலிதா சட்டமன்றத்தில், நூறாண்டுகள் ஆனாலும் அதிமுக கட்சியும் ஆட்சியும் தொடரும் என்றும், எவராலும் அழிக்க முடியாது எஃகு கோட்டையாக திகழும் என்றும் சூளுரைத்தார். அவருடைய சூளுரையை ஏற்று, வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். அதுதான் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக்கடன் என்பதை ஒவ்வொரு தொண்டனும் உணர வேண்டும், இரவு, பகல் பாராமல் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • icvator25

  3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

 • sheep25

  ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!

 • 25-02-2021

  25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayyaaaa_bdaayy

  73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

 • golfer-woods

  அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்