மாயமான சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு
2021-01-28@ 00:30:47

ஆவடி: ஆவடி அடுத்த அய்யப்பாக்கம், வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செண்பகம். இவரது கணவர் முனிசாமி இறந்துவிட்டார். இவர்களுக்கு காளிதாஸ் (22), கணேஷ் (14), ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். காளிதாஸ், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கணேஷ் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 25ம் தேதி உறவினரின் திருமணத்துக்கு செண்பகம் சென்றார். அன்று காளிதாசும் வேலைக்கு சென்றுவிட்டர். கணேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். காளிதாஸ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணேஷ் வீட்டில் இல்லை.
தம்பி கணேஷை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காளிதாஸ் நேற்றுமுன்தினம் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாம்வின்செண்ட் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து கணேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அயப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாயில் கணேஷின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கணேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா?.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!
தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி..: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு
ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!
வெளிநாடுகளில் இருந்து ரூ.1331 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக பதிலளிக்க மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்