SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!

2021-01-27@ 18:40:29

சென்னை: தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 36 ஆயிரத்து 815 (8,36,315) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,  தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,36,315 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 564 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,19,306 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,333 ஆக உயர்ந்துள்ளது.
* அரசு மருத்துவமனையில் 5; தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 159 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,30,675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,58,08,217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 56,098 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 4,676 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,05,456 பேர் ஆண்கள், இன்றைக்கு  மட்டும் 305 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,30,825 பேர் பெண்கள், இன்றைக்கு  மட்டும் 207 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு  திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 254 மையங்களில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 186.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 5 யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* டெல்லி-2.
* கர்நாடகா-2.
* பீகார்-1
* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்