ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து
2021-01-27@ 12:41:51

சென்னை: ரஜினிகாந்த் ஆசிர்வாதம் மட்டுமே போதும்; மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன் என்று அர்ஜுனமூர்த்தி கூறியுள்ளார். ரஜினிகாந்தின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம் என அர்ஜுனமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி தொடங்கப்படாத ரஜினியின் கட்சியில் சேர்ந்த அர்ஜுன மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நீண்ட கால அரசியல் மாற்றத்தின் நிறைவான நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து நமது தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்ப இல்லனா எப்போது என்று சொல்லிய சூப்பர் ஸ்டார் அவர்களின் நல்ல எண்ணம், நல்ல மனது, நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள். ஒரு நடிகராக அவரது தொழில் தர்மத்தின் காரணமாக அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வர கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். எனவே என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டிற்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.
இந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அரசியலில் இல்லை என்றாலும் எனக்கு தலைவர் என்பதையும் தாண்டி நானும் ஒரு ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் . அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்ட பெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆசிர்வாதம் மட்டுமே போதும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவோம். விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன் ” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ரஜினியை முன்வைத்து அர்ஜுன மூர்த்தி அரசியலில், தனிக்கட்சியுடன் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.48 லட்சம் அதிரடி பறிமுதல்
2021 சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் திமுக ஆட்சி; அசாம், புதுச்சேரி- பாஜக கூட்டணி, கேரளா- கம்யூனிஸ்ட்...ஆங்கில தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தகவல்.!!!
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்; முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 556 பேர் பாதிப்பு: 532 பேர் குணம்; 03 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் த.வா.க; ம.வி.க; ஆதித்தமிழர் பேரவை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.!!!
திருநின்றவூர் பேரூராட்சியில் எங்கெங்கு காணினும் குப்பை நோய்பிடியில் தவிக்கும் மக்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்