அதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் : டிடிவி தினகரன் பேட்டி
2021-01-27@ 12:32:33

பெங்களூரு : அதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையானார். சசிகலாவிடம் விடுதலை தொடர்பான ஆவணங்களை மருத்துவமனையில் சிறைத்துறை ஒப்படைத்தது. சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையில் டிடிவி தினகரன், வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் ஆகியோர் உடன் இருக்கின்றனர். சசிகலா விடுதலையையொட்டி அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிலையில், பெங்களுருவில் அம்மா மக்கள் முன்னேற்றக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டி:' சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலையாகிவிட்டார். தமிழக மக்கள் சின்னம்மாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவை சென்னை அழைத்து வருவது குறித்து மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும். மருத்துவர்களின் அறிவுரைப்படி சின்னம்மாவை தமிழகம் அழைத்து வருவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம், “சசிகலா விடுதலையன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா நினைவிடம் திறந்ததை பார்க்கும் போது, சசிகலா விடுதலையை கொண்டாடுவது போல் தான் உள்ளது.'என்றார். அத்துடன் அதிமுக – அமமுக இணையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டிடிவி தினகரன், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை எனக் கூறினார்.
Tags:
டிடிவி தினகரன்மேலும் செய்திகள்
திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கான திட்டம் முழுமையாக நிறைவேறும்: மகளிர் தினத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
சட்டமன்ற தேர்தலில் டிடிவி. தினகரன் 2 தொகுதிகளில் போட்டி: நாளை அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கோவிட்கேர் மையங்களில் 4 ஆயிரம் படுக்கைகள் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர் கோரிக்கை
மாபா.பாண்டியராஜன் விருதுநகரில் போட்டி?
நடிகர் கமல் ஆலந்தூரில் போட்டியிட முடிவு
தமிழக மக்களுக்கு விடிவு வேண்டுமானால் அதிமுக அராஜக ஊழல் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்: வெற்றிக்காக உழைக்க கே.எஸ்.அழகிரி அழைப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்