அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு: 21.64 லட்சம் பேர் உயிரிழப்பு
2021-01-27@ 07:41:32

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.64 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,164,678பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 100,798,715 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 72,797,823 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,377 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 10.08 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் 100,809,750 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,165,081 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 72,818,634 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 25,823,591 பேர் சிகிச்சையில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,008,791 என அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 435,387 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 15,763,629 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,690,279 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 153,751 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,358,328 என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,936,590 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 218,918 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,798,655 என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பிறக்கப் போகும் குழந்தையின் நிறம் குறித்து சந்தேகித்தனர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இனவெறி: கண்ணீர் மல்க மனம் திறந்த மேகன்
கினியா ராணுவ தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 600 பேர் காயம்
ஹெலிகாப்டர் விபத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் டசால்ட் மரணம்
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி தந்தது சீனா
இந்தியாவும், சீனாவும் நண்பர்கள்; எதிரிகள் அல்ல!: சீன வெளியுறவு அமைச்சகம் ட்வீட்..!!
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1 லட்சம்; பைடனின் திட்டத்திற்கு செனட் ஒப்புதல்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்