துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
2021-01-27@ 02:30:12

புதுச்சேரி: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுவை கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி அண்ணா சிலை அருகில் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அரசுக்கு எவ்வாறெல்லாம் கவர்னர் தொல்லை கொடுத்தார். என்பதை மக்களிடம் சொல்லி கையெழுத்து பெற வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களை தடுத்து நிறுத்த கிரண்பேடி யார்?. இன்றைக்கு புதுச்சேரி எப்படி இருக்கிறது பாருங்கள். ஜம்மு- காஷ்மீர் போல மாறிவிட்டது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக நடப்பதால் பயந்து கொண்டு வெளியே வரவில்லை. கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அரசியல் சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும். காங்கிரசை விட்டு யார் போனாலும் கட்சியை அசைத்து கூட பார்க்க முடியாது. இந்த பதவி எனக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் காங்கிரஸ்காரன்தான். கடைசி வரை காங்கிரசில் தான் இருப்பேன். பதவி, பணம், சொந்த பந்தத்துக்கு செய்யமுடியவில்லை என்று கூறிவிட்டு சிலர் ஓடிப்போகிறார்கள். அவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. கட்சியை விட்டு செல்பவர்கள், விரைவில் காணாமல் போய்விடுவார்கள். எதிரிகளை மன்னிப்போம். துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டோம், என்றார்.
மேலும் செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா கிடையாது: தெற்கு வீதியில் மட்டும் நடைபெறும்
கிருஷ்ணகிரி அருகே குடுமியுடன் சுற்றித்திரிந்த 15 வயது சிறுவனுக்கு கிராப் வெட்டி அனுப்பிய இன்ஸ்பெக்டர்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு: டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு
புதிய வாகனங்கள் வாங்கினால் 5% தள்ளுபடி அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை: 20 ஆண்டாக நீட்டித்து வழங்க வலியுறுத்தல்
நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு பொக்லைனை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்: நல்லம்பள்ளி அருகே பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் என்எல்சி தொழிலாளி தற்கொலை
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்