கோயில், சர்ச், வீடு உள்பட 8 இடங்களில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
2021-01-27@ 02:21:15

செங்கல்பட்டு: சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் மசூதி தெரு, செல்லியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் விண்ணரசி மாதா கோயில், எபினேசர் தேவாலயம், ஈஸ்வரன் கோயில், அம்மன் கோயில் உள்ளிட்ட பல வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த வழிபாட்டு தலங்களின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பரிசு பொருட்கள், ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அது மட்டுமில்லாமல், செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள விக்னேஷ் என்பவரின் வீட்டை உடைத்து 10 சவரன் ,50 ஆயிரத்தை கொள்ளையடித்து உள்ளனர். மேலும், 2 வீடுகளிலும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கொள்ளை சம்பவங்கள் நடந்த 5 கோயில்கள் மற்றும் 3 வீடுகளில் போலீசார் சோதனை செய்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் இந்த இடங்களில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். புகாரின்பேரில், மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் மர்ம கும்பலை சேர்ந்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து கோயில், தேவாலயம் உள்பட 8 இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
திருமங்கலம் துணிக்கடையில் புடவை திருடிய பெண் கைது: 4 பேருக்கு வலை; கார் பறிமுதல்
சிறுமியை ஏமாற்றி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது
ராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை?: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை
திருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா? போலீசார் விசாரணை
தங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது
உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்