நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பதை ஏற்க முடியாது: கே.எஸ்.அழகிரி அறிக்கை
2021-01-27@ 01:02:21

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை அதிமுக அரசு ரூ.50 கோடி செலவில் அமைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார் என்று செய்தி வெளிவந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த ஜெயலலிதாவிற்கு அதிமுக கட்சி அலுவலகத்தில் சிலை அமைப்பதிலோ, நினைவிடம் அமைப்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், நீதிமன்றத்தின் மாண்பை சிதைக்கிற வகையில் மக்கள் வரி பணத்தில் நினைவிடம் அமைப்பது நமது பாரம்பரியத்திற்கு, சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு சென்னை காமராஜர் சாலையில் நினைவிடம் திறப்பதை விட ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
தீவிரமடையும் கொரோனா பரவல்!: தேர்தல் பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு..!!
சொல்லிட்டாங்க...
மே. வங்கத்தில் ராகுலின் பிரசார கூட்டங்கள் ரத்து: மற்ற தலைவர்களுக்கும் அழைப்பு
புகைப்பிடிப்பதை ஒழிக்க நியூசிலாந்தின் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு அதிகளவு தடுப்பூசிகள்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!