அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: திருப்பூர் மருத்துவமனையில் அனுமதி
2021-01-26@ 16:43:20

வெள்ளகோவில்: முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 ம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது. பள்ளியில் மாணவர்களுக்கு கடந்த 23ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும், 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிசிக்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் மருந்துகள் தெளிக்கப்பட்டு சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்காக நடந்த எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் ரத்து: சொந்த மாவட்டங்களில் பணிபுரிய அனுமதி
கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படத்துடன் 3,030 நோட்டு புத்தகங்கள் பறிமுதல்: கரூர் அருகே பறக்கும் படை அதிரடி
கன்னியாகுமரியில் கலெக்டர் பாராகிளைடரில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சாகசம்
தமிழகத்தில் பாஜ போட்டியிடும் 20 இடத்தில் வெற்றி பெறுவது மட்டுமே நமது லட்சியம்: எல்.முருகன் முன்னிலையில் நிர்வாகி பேசியதால் பரபரப்பு
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு ஜாமீன் காப்பகத்திற்கு பொன்னி அரிசி வழங்க நிபந்தனை