உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும்...! தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள்: மாடர்னா நிறுவனம்
2021-01-26@ 12:55:55

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயல்திறனுடன் போராடுகிறது. என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை பல்வேறு நாடுகள் தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன்பு பரவிய வைரசை விட உருமாறிய கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என்றும், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக செயல் திறனுடன் பலன் அளிக்குமா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக பலன் அளிப்பதாக முதல்கட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் செயல்திறனுடன் போராடுகிறது. என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இங்கிலாந்தில் பரவும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயல்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்காமல் செயல்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தது. ஆனால் தடுப்பூசியின் 2-வது டோசின் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். இதனால் தென்ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள் செய்யப்படும். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
பிறக்கப் போகும் குழந்தையின் நிறம் குறித்து சந்தேகித்தனர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இனவெறி: கண்ணீர் மல்க மனம் திறந்த மேகன்
கினியா ராணுவ தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 600 பேர் காயம்
ஹெலிகாப்டர் விபத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் டசால்ட் மரணம்
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி தந்தது சீனா
இந்தியாவும், சீனாவும் நண்பர்கள்; எதிரிகள் அல்ல!: சீன வெளியுறவு அமைச்சகம் ட்வீட்..!!
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1 லட்சம்; பைடனின் திட்டத்திற்கு செனட் ஒப்புதல்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்