உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
2021-01-26@ 07:37:54

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.48 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த2,148,467 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 100,257,803 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 72,255,817 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,438 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.21 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.59 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகள்
கினியா ராணுவ தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 600 பேர் காயம்
ஹெலிகாப்டர் விபத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் டசால்ட் மரணம்
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி தந்தது சீனா
இந்தியாவும், சீனாவும் நண்பர்கள்; எதிரிகள் அல்ல!: சீன வெளியுறவு அமைச்சகம் ட்வீட்..!!
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1 லட்சம்; பைடனின் திட்டத்திற்கு செனட் ஒப்புதல்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது
கினியாவில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறிய ஆயுதங்கள்!: 22 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்..!!
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்