அதிகாரி வீட்டில் கொள்ளை
2021-01-26@ 02:06:34

ஆவடி: ஆவடி பாலவேடு சாஸ்திரி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் அமேத்ராம்சிங்(67). பட்டாபிராமில் உள்ள இந்திய உணவுக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் செயின், ரூ.90 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது. தகவலறிந்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். மேலும் புகாரின் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சோப்பு கட்டிக்குள் மறைத்து கடத்திய ரூ.35.7 லட்சம் தங்கம் பறிமுதல்: ஆசாமி கைது
வாடகை தகராறு காரணமாக துணி கடையை எரித்த 5 பேர் கைது: கட்டிட உரிமையாளருக்கு வலை
ரூ.1,500 கோடி மோசடியில் அரசு ஊழியர்கள் உட்பட 24 பேர் கைது: தெலங்கானாவில் பரபரப்பு
கஞ்சா கடத்திய 3 பேர் கைது
தொழிலாளி அடித்து கொலை
கோயில்களில் கொள்ளை