திருப்போரூர் கோயில் குளத்தில் தவறி விழுந்து பெண் பலி
2021-01-26@ 00:54:40

திருப்போரூர்: சென்னை கொடுங்கையூர், சேலைவாயிலை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி கிருஷ்ணவேணி (43). நேற்று காலை ஏழுமலை, கிருஷ்ணவேணியுடன் திருப்போரூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து, வீட்டுக்கு புறப்படும்போது, கந்தசுவாமி கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, கோயிலில், சாமி தரிசனம் முடிந்து, அங்குள்ளகுளத்தின் படிக்கட்டுகளில் நின்று 2 பேரும் மீன்களுக்கு பொரி போட்டனர். அப்போது கிருஷ்ணவேணி, திடீரென குளத்தில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஏழுமலையும் குளத்தில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, 2 பேைரயும் மீட்டனர். அதற்குள் கிருஷ்ணவேணி இறந்துவிட்டார்.
புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (37). அங்குள்ள தனியார் பண்ணையில் வேலை செய்தார். நேற்று சந்திரன், தோட்டத்தில் வேலை செய்தார். மதியம் உணவு முடிந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டி கரை மீது அமர்ந்துள்ளார். அப்போது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, தொட்டியில் விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தார். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
திருச்சி ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு; கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்..!
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்: தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: நெல்லை ஆட்சியர் பேட்டி.!!!!
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்..!
திருச்செங்கோட்டில் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 2-ம் கட்ட தடுப்பூசி போட இயலாமல் தவிப்பு
வள்ளியூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி
கோடை வெயில் சுட்டெரிப்பதால் காவேரிப்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறைந்தது-பாசனம் பாதிப்பதாக விவசாயிகள் கவலை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!