டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது: பிப்.1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி...விவசாய சங்கங்கள் அறிவிப்பு.!!!
2021-01-25@ 18:43:16

டெல்லி: வரும் பிப்ரவரி 1- ம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட கோரி மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
இதற்கிடையே, புதிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நாளை ஜனவரி 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் தலைநகர் டெல்லி சென்று பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கிரந்திகாரி கிசான் யூனியன் விவசாய சங்க பிரதிநிதி தர்ஷன் பால், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி வெவ்வேறு இடங்களில் பேரணி நடத்தவுள்ளதாக தெரிவித்தார். டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரண்டு மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி, தனது 3வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தல்!: மொத்த இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி..பாஜக-வுக்கு படுதோல்வி..!!
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது!: ராகுல்காந்தி
மேற்கு வங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,989 பேர் கொரோனாவால் பாதிப்பு: 98 பேர் உயிரிழப்பு
நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30' திட்டம் தொடக்கம்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்