பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா?.. ரிசர்வ் வங்கி விளக்கம்
2021-01-25@ 17:05:39

டெல்லி: பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. போலி நோட்டுகளின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது, ரிசர்வ் வங்கி (Reserve Bank) பழைய தொடர் கரன்சி நோட்டுகளை நிறுத்தி புதிய நோட்டுகளை கொண்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு நிறுத்தப்படும் பழைய நோட்டுகள் அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட மொத்த நோட்டுகளின் மதிப்பிலான பணத்தை வங்கி உங்கள் கணக்கில் மீண்டும் பரிமாற்றம் செய்யும், அல்லது புதிய நோட்டுகளாக வங்கி மாற்றிக்கொடுக்கிறது.
இந்நிலையில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை திருப்ப பெற இருப்பதாக ஒரு தகவலானது தொடச்சியாக வெளியாகி வந்தது. இந்த வதந்தியை முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தற்போது ரிசர்வ் வங்கியானது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பழைய வரிசை ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. 100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறானது. மேலும் தற்போது இதுபோன்ற சூழல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தல்!: மொத்த இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி..பாஜக-வுக்கு படுதோல்வி..!!
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது!: ராகுல்காந்தி
மேற்கு வங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,989 பேர் கொரோனாவால் பாதிப்பு: 98 பேர் உயிரிழப்பு
நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30' திட்டம் தொடக்கம்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்