கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.!!!
2021-01-25@ 16:55:50

டெல்லி: கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி தொடங்கி வைத்தார். இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 504 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இருப்பினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாக, பெரும்பாலான முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள தயங்குகின்றனர். இதற்கு கொரோனா தடுப்பூசி குறித்து பரப்பப்படும் வதந்திகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொடர்பான 2 தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தனிநபரோ, அமைப்போ, குழுவோ கொரோனா தடுப்பூசி தொடர்பாக வதந்தி மற்றும் அவதூறு பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இதில் முரண்பாடு என்னவென்றால், உலக நாடுகள் நம்மிடம் இருந்து தடுப்பூசி வாங்க தயாராக உள்ளன. ஆனால். நம் நாட்டு மக்களில் பலர் அதை போட்டுக் கொள்ள தயங்குகிறோம். பக்க விளைவுகள் இல்லாத தடுப்பூசிகளே உலகத்தில் கிடையாது. கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயல்திறம் மிக்கவை. எனவே, அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும். குறுகிய அரசியல் காரணங்களுக்காக, தடுப்பூசி பற்றி வதந்திகளை பரப்பக் கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தல்!: மொத்த இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி..பாஜக-வுக்கு படுதோல்வி..!!
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது!: ராகுல்காந்தி
மேற்கு வங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,989 பேர் கொரோனாவால் பாதிப்பு: 98 பேர் உயிரிழப்பு
நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30' திட்டம் தொடக்கம்
ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி தயாரிப்பு தொடக்கம்: இம்மாத இறுதியில் தயாராகும்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்