அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினர்: நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர முடியுமா?...பிரதமர் மோடிக்கு மம்தா மருமகன் சவால்.!!!
2021-01-25@ 14:49:59

கொல்கத்தா: அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினர் மட்டுமே இருக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முடியுமா? என பிரதமர் மோடி மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட் 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதி, திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) நாடாளுமன்ற உறுப்பினரும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி நேற்று நடைபெற்ற கட்சியில் பேரணியில் உரையாற்றியபோது, அரசியலில் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே இருப்பதை நீங்கள் (பிஜேபி) உறுதிசெய்தால், அடுத்த கணத்திலிருந்து அரசியலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மம்தா பானர்ஜி மட்டுமே இருப்பார். நான் அதை உறுதியளிக்கிறேன் என்றார்.
மேலும், இந்த சவாலை ஏற்க முடியுமா? அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினரை மட்டுமே அனுமதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு நான் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார். அத்தகைய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால், நான் 24 மணி நேரத்தில் அரசியலை விட்டு வெளியேறுவேன். மம்தா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன் என்றும் அபிஷேக் பானர்ஜி கூறினார்.
மேலும் செய்திகள்
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது!: ராகுல்காந்தி
மேற்கு வங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,989 பேர் கொரோனாவால் பாதிப்பு: 98 பேர் உயிரிழப்பு
நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30' திட்டம் தொடக்கம்
ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி தயாரிப்பு தொடக்கம்: இம்மாத இறுதியில் தயாராகும்
கோ-வின் செயலியில் மூத்த குடிமக்கள் ஆர்வம்: கொரோனா தடுப்பூசிக்காக 50 லட்சம் பேர் முன்பதிவு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்