டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் சதி திட்டம் : 308 ட்விட்டர் பக்கங்களை கண்காணித்து டெல்லி காவல்துறை எச்சரிக்கை
2021-01-25@ 10:52:34

இஸ்லாமாபாத் : டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க பாகிஸ்தானில் சதி திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 308 ட்விட்டர் பக்கங்களை கண்காணித்து டெல்லி போலீஸ் இவ்வாறு எச்சரித்துள்ளது. டெல்லியில் நாளை உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது. இதனைசீர்குலைத்து அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பெரும் குழப்பத்தையும் மோதலையும் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக டெல்லி சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையர் தீபேந்திர பதக் கூறியுள்ளார்
.இந்த சதி திட்டம் ட்விட்டர் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று கூறியுள்ள அவர், கடந்த 13ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான ட்விட்டர் பதிவுகளில் சிலர் இதற்கான பிரச்சாரத்தை தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மற்ற புலனாய்வு முகமைகள் நடத்திய விசாரணையிலும் பாகிஸ்தானின் சதி வெளியாகி இருப்பதாக தீபேந்திர பதக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிக்கு எல்லையில் விவசாயிகளால் பிடிபட்ட இளைஞர் ஒருவர் 4 விவசாய சங்க தலைவர்களை சுட்டுக் கொன்று போராட்டத்தை சீர்குலைக்க வந்துள்ளதாக வாக்குமூலம் அளித்து இருந்தார். ஆனால் விவசாயிகள் மிரட்டியதால் தான் அந்த இளைஞர் அவ்வாறு கூறியதாக டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை கோரி வழக்கு
ராமர் கோயில் கட்ட நன்கொடை தராததால் ஆசிரியர் பணிநீக்கம்: ஆர்எஸ்எஸ் பள்ளி அதிரடி
சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை வாங்கிய பிரதமர்
பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தின் கருத்து தவறாக சித்தரிப்பு பெண்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறோம்: உச்சநீதிமன்றம் கருத்து
மகளிர் தினத்தையொட்டி பெண்கள் தலைமையில் விவசாயிகள் போராட்டம்
பாட்லா ஹவுஸ் வழக்கில் அரீஜ் கான் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்