சசிகலா உடல்நிலை சீராக உள்ளது..! கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு
2021-01-25@ 10:25:46

பெங்களூரு: சசிகலாவை கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை= நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இந்நிலையில் சசிகலா ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது என பெங்களூரு மருத்துவமனை தெரிவித்துள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதாக சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது எனவும் உணவு உட்கொள்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா எழுந்து உட்கார்ந்தாகவும், உதவியுடன் நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைக்கு தடை கோரி வழக்கு
ராமர் கோயில் கட்ட நன்கொடை தராததால் ஆசிரியர் பணிநீக்கம்: ஆர்எஸ்எஸ் பள்ளி அதிரடி
சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை வாங்கிய பிரதமர்
பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தின் கருத்து தவறாக சித்தரிப்பு பெண்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறோம்: உச்சநீதிமன்றம் கருத்து
மகளிர் தினத்தையொட்டி பெண்கள் தலைமையில் விவசாயிகள் போராட்டம்
பாட்லா ஹவுஸ் வழக்கில் அரீஜ் கான் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்