வீரியம் குறையாத கொரோனா..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு; 21.37 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு
2021-01-25@ 07:43:23

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,137,893 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 99,732,581 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 71,714,828 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,408 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.58 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
மேலும் செய்திகள்
சக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.!!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..!!
விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு
மியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி
அமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா: அதிபர் பைடனுக்கு முதல் சறுக்கல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்