அதிமுகவில் 100% முற்றிலும் நிராகரித்துவிட்ட நிலையில் சசிகலாவின் சமாதி சபதம் நிறைவேறுமா? மதில்மேல் பூனையாக தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்
2021-01-25@ 01:19:30

ஜெயலலிதாவுக்கு பின் அதிமுக நிலைதடுமாறி சென்று கொண்டிருக்கிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 6ம் தேதி பதவியேற்றார். அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். 2 மாதம் தான் ஓ.பி.எஸ். அந்த முதல்வர் பதவியில் இருந்தார். திடீரென அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வானார். சசிகலா ஆட்சி அமைப்பதற்கான வேலை நடைபெற்று வந்தது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர்ராவ் அழைக்கவில்லை.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு சிறை செல்லும் வழியில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜெயலலிதா சமாதி மேல் சசிகலா ஆவேசமாக மூன்று முறை கையை ஓங்கி அறைந்து சபதம் செய்தார். ‘மீண்டும் வந்து முதல்வராவேன். அதிமுகவை வழி நடத்துவேன்’ என அவர் சபதம் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் முதல்வராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். பிரிந்து சென்ற ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தார். வர உள்ள தேர்தலிலும் எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலா 27ம் தேதி விடுதலையாவது உறுதியானது. இதனால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. கட்சிக்குள் இருக்கும் அவரது விசுவாசிகள் சசிகலா வந்ததும் அவரிடம் சரணடைய காத்துக்கிடப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் சசிகலாவை சுத்தமாக ஒதுக்கிவைத்து விட்டனர். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை சசிகலா கட்சியிலேயே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அதிமுகவில் இணைந்துவிட்டனர். சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை” என்று எடப்பாடி அடித்துக் கூறிவிட்டார். இதற்கிடையில் சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தேறி வருகிறது. எப்படியும் 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுக அறவே சசிகலாவை ஒதுக்கிவைத்துவிட்ட நிலையில், அவரது சமாதி சபதம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மதில்மேல் பூனையாக இப்பக்கமும் அப்பக்கமும் தாவ முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோரின் முடிவைப் பொறுத்தே சசிகலாவின் அடுத்த கட்டம் ஆரம்பமாகும். இதுகுறித்து நான்கு கோண அலசல் இங்கே:
Tags:
AIADMK 100% Absolutely will Sasikala's Samadhi vow be fulfilled? Cat on the wall suffering AIADMK executives அதிமுக 100% முற்றிலும் சசிகலாவின் சமாதி சபதம் நிறைவேறுமா? மதில்மேல் பூனை தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்மேலும் செய்திகள்
திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கான திட்டம் முழுமையாக நிறைவேறும்: மகளிர் தினத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
சட்டமன்ற தேர்தலில் டிடிவி. தினகரன் 2 தொகுதிகளில் போட்டி: நாளை அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கோவிட்கேர் மையங்களில் 4 ஆயிரம் படுக்கைகள் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர் கோரிக்கை
மாபா.பாண்டியராஜன் விருதுநகரில் போட்டி?
நடிகர் கமல் ஆலந்தூரில் போட்டியிட முடிவு
தமிழக மக்களுக்கு விடிவு வேண்டுமானால் அதிமுக அராஜக ஊழல் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்: வெற்றிக்காக உழைக்க கே.எஸ்.அழகிரி அழைப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்