நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 464-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது..!
2021-01-24@ 11:03:07

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 464-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெறுகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்திலிகுந்து துவங்கியது.
மேலும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூட்டின் மீது பூக்களை தூவியும் பல்வேறு வடிவில் வந்த மினாராக்களை கண்டும் மகிழ்ந்தனர். சந்தனக்கூடு ஊர்வலமானது இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூரை சென்றடைந்தது.
பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெறும் சந்தனம் பூசும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தாரை தப்பட்டை பேண்டு வாத்தியங்கள் உடன் மக்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக செல்வதற்கு போலீசார் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருச்செங்கோட்டில் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 2-ம் கட்ட தடுப்பூசி போட இயலாமல் தவிப்பு
வள்ளியூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி
கோடை வெயில் சுட்டெரிப்பதால் காவேரிப்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறைந்தது-பாசனம் பாதிப்பதாக விவசாயிகள் கவலை
காவேரிப்பாக்கம் பகுதிகளில் சொர்ணவாரி பருவத்தில் விவசாய பணிகள் மும்முரம்
அதிகரிக்கும் கொரோனாவால் அச்சம் பூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு-விசைப்படகுகள் வெறிச்சோடின
அரசு இருக்கு... ஆனா இல்லை...மிரட்டும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!