வேறு பெண்ணுடன் தொடர்பால் ஆத்திரம் தொழிலாளியை கொன்ற மனைவி அரிவாளுடன் போலீசில் சரண்
2021-01-24@ 02:38:42

கோவில்பட்டி: வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த மில் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த மனைவி, அரிவாளுடன் போலீசில் சரணடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, லாயல் மில் காலனியைச் சேர்ந்தவர் பிரபு (38), மில் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பிரபு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் படத்தை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். இதையறிந்த உமாமகேஸ்வரி கணவரிடம் கேட்டுள்ளார். அவள் கர்ப்பமானதால் கைவிட முடியாது. 2வதாக திருமணம் செய்யப் போகிறேன். இஷ்டம் இருந்தால் நீ என்னுடன் வாழ்க்கை நடத்து, இல்லையென்றால் செல்லலாம் என்று கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்து பிரபு தகராறு செய்யவே ஆத்திரம் அடைந்த உமாமகேஸ்வரி, அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த பிரபு படிக்கட்டில் விழுந்து உயிரிழந்தார். பின்னர் உமாமகேஸ்வரி, அரிவாளுடன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி
சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது
சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை
செல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்