SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மு.க ஸ்டாலின்

2021-01-22@ 15:15:44

சென்னை: சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் தொகுதியைப் பார்வையிட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து, நல உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

1) வார்டு 65 - சீனிவாசா நகர் 3-வது தெருவில் திறந்தவெளி நிலத்தில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணிக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

2) வார்டு 65 - சீனிவாசா நகர் 6-வது குறுக்குத் தெரு - கன்னியம்மன் கோவிலுள்ள குளத்தினை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

3) வார்டு 64 - சன்னதி தெருவில் 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் திட்டத்தின் கீழ், ஏழை - எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் மருத்துவ சேவை வழங்கும் நிகழ்ச்சியினைப் பார்வையிட்டார்.

4) வார்டு 68 - திரு.வி.க நகர் குடியிருப்பில் இரண்டு குழந்தைகள் நல்வாழ்வு மையம் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

5) வார்டு 68 - பல்லவன் சாலை. ஆரம்ப சுகாதார மையத்தில் காசநோய் சிகிச்சைக்காக கூடுதல் அறைகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

6) வார்டு 68 - பல்லவன் சாலையில் நியாயவிலைக் கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

7) வார்டு 67 - கனகர் தெரு, சுந்தரராஜர் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள குளத்தை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

8) வார்டு 66 - ஜவஹர் நகர் 2-வது வட்ட சாலை. குழந்தைகள் விளையாட்டுத் திடலை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

9) வார்டு 66-ல் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதலைத் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி  - 21

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி - 23

மடிக்கணினி - 8

மருத்துவ உதவி - 16

திருமண உதவி - 8

தையல் இயந்திரம் - 12

மீன் பாடி வண்டி - 5

4 சக்கர தள்ளு வண்டி - 5

2 சக்கர மோட்டார் பொருத்திய வாகனம் - 1

காது கேட்கும் இயந்திரம் - 1

இஸ்திரிப் பெட்டி - 1

மாவு அரவை இயந்திரம் - 1

செயற்கைக் கால் - 1

வீடு தீ விபத்து ஏற்பட்ட குடும்பத்திற்கு உதவி - 3

- என, மொத்தம் -106 பேருக்கு திமுக தலைவர் மு.ஸ்டாலின் நல திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்