தொடர்ந்து சீண்டியதால் ஆத்திரம் எஸ்டேட் தொழிலாளியை விரட்டும் காட்டு யானை-வைரலாகும் வீடியோ
2021-01-22@ 12:45:27

வால்பாறை : வால்பாறையில் தொடர்ந்து சீண்டியதால் எஸ்டேட் தொழிலாளியை காட்டு யானை விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் எஸ்டேட் பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இவை இரவு நேரத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்கின்றன. அவ்வாறு செல்லும்போது வழியில் உள்ள வீடுகள், ேரஷன் கடைகளை சேதப்படுத்தி உணவுப்பொருட்களை ருசித்து செல்கின்றன.
சில நேரங்களில் குடியிருப்பு பகுதியில் புகும் யானைகளை விரட்டும்போது, வேறு வழியில் செல்லும் யானைகள், விடிய துவங்கியதும் சிறு வனம் அல்லது நீர் நிலை பகுதிகளில் புகுந்து விடுகின்றன. சில நேரங்களில் கண் பார்வையில் உள்ள யானைகளை எஸ்டேட் தொழிலாளர்கள் கல்லால் அடித்தல், பட்டாசு வெடித்தல், சத்தமிடுதல், புகை போடுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சீண்டுவதால் அவை துரத்தி சென்று தாக்குகின்றன.
இது குறித்து வனத்துறையினர் எச்சரித்தும் யாரும் கேட்பதில்லை. தொடர்ந்து யானைகளை சீண்டி வருகின்றனர். நேற்று முன்தினம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் நின்ற ஒரு யானை, தொழிலாளி ஒருவர் சீண்டியதால் ஆத்திரமடைந்தது. அந்த யானை, அவரை தொடர்ந்து விரட்டி சென்றது. உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிய அந்த தொழிலாளி, புதர் மறைவில் சென்று தப்பினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
திருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
ஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்..! ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
குடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்