செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு வழங்கிய இழப்பீடு எவ்வளவு?: டெல்லி அரசுக்கு என்சிஎஸ்சி ஆணையம் கடிதம்
2021-01-22@ 00:28:10

புதுடெல்லி: செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கியதற்கான விவர அறிக்கயை சமர்ப்பிக்குமாறு டெல்லி மாநில அரசை தேசிய பட்டியலின ஆணையம் (என்சிஎஸ்சி) கேட்டுக் கொண்டுள்ளது. கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் போது கடந்த 1993ம் ஆண்டு முதல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. டெல்லியை பொருத்தவரை கடந்த 1993 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு இடையே மட்டும் சுமார் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய துப்பரவு பணியாளர்கள் ஆணையம்(என்சிஎஸ்கே) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செப்டிக் டேங்கு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை இதுவரை வழங்காமல் நிலுவையில் இருப்பின் அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று தேசிய பட்டியலின ஆணையம் டெல்லி அரசை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, இதுவரை உயிரிழந்தோர் மற்றும் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறித்த விவரங்களை என்சிஎஸ்சி ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு டெல்லி அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆணையம் சார்பில் டெல்லி தலைமை செயலாளர் விஜய்குமார் தேவ் மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ரஷ்மி சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தொழிலாளர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிப்பதற்காக வழங்கப்படும் ஒரு முறை பண உதவி மற்றும் அத்தகைய நபர்களுக்கு வழங்கப்படும் திறன் பயிற்சி பற்றிய விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கமிஷன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் மற்றும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா போன்ற மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பட்டியின குடும்பங்களின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், டெல்லியில் வசிக்கும் பட்டியலின மக்களின் உடல்நலம் மற்றும் கல்வி அளவுருக்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் சமர்ப்பிக்க ஆணையம் கேட்டுள்ளது. டெ ல்லியில் 1993 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு இடையே மட்டும் சுமார் 44 பேர் உயிரிழந்துள் தாக தேசிய துப்பரவு பணியாளர்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
மிரட்டல் கடிதத்துடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் : முகேஷ் அம்பானியின் உயிருக்கு ஆபத்தா என விசாரிக்க மராட்டிய அரசு உத்தரவு!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!