திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளராக ரஜினி மன்ற மாவட்ட நிர்வாகி நியமனம்: தலைமைக்கழகம் அறிவிப்பு
2021-01-22@ 00:25:48

சென்னை: தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விரும்பும் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என கடந்த 18ம் தேதி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி மன்றத்தில், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 மாவட்ட செயலாளர்கள் கடந்த வாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
Tags:
DMK Minority Welfare Division Rajini Mantra District Administrator Appointed as Joint Secretary Headquarters திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளராக ரஜினி மன்ற மாவட்ட நிர்வாகி நியமனம் தலைமைக்கழகம்மேலும் செய்திகள்
கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
கோடைகால தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம்: கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
அதிவேக சூப்பர் பைக்குகளை தடை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!