நண்பர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் கிணற்றில் மூழ்கி மண் எடுக்க முயன்றவர் பலி
2021-01-22@ 00:25:41

சென்னை: சென்னை கே.கே.நகர் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர், நக்கீரன் தெருவை சேர்ந்தவர் பிரின்ஸ் (40). அங்குள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர், கூடுவாஞ்சேரி அடுத்த பெரிய அருங்கால் கிராமத்தை சேர்ந்த மோசஸ். நேற்று முன்தினம் மோசஸ் பிறந்தநாள் என்பதால், அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பிரின்ஸ் உள்பட நண்பர்கள் கலந்துகொண்டு, கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், நண்பர்கள் அனைவரும் மது அருந்தினர். பின்னர், மோசஸ் வீட்டின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் 20க்கும் மேற்பட்டோர், போதையில் குதித்து விளையாடினர்.
அப்போது, கிணற்றின் ஆழத்தில் உள்ள மண்ணை எடுத்து வருவதாக தனது நண்பர்களிடம் பிரின்ஸ் பந்தயம் கட்டினார். 2 முறை முயன்றும் மண் எடுக்கவில்லை. இதனால், நண்பர்கள் கிண்டல் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த பிரின்ஸ் மண் எடுக்காமல், வெளியே வரமாட்டேன் எனறு கூறி 3வது முறையாக கிணற்றில் குதித்தார். பின்னர் அவர், வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, தண்ணீரில் மூழ்கிய பிரின்சை சடலமாக மீட்டனர்.
Tags:
Friend's birthday tragedy drowning in the well mud kill நண்பர் பிறந்தநாள் சோகம் கிணற்றில் மூழ்கி மண் பலிமேலும் செய்திகள்
டாஸ்மாக் கடை உடன் இணைந்து செயல்படும் பார்கள் மூடல்: நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுவிற்பனை...தமிழக அரசு அறிவிப்பு.!!!!
தினசரி பாதிப்பு 11,000-ஐ நெருங்கியது: தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் பலி; 75,116 பேருக்கு சிகிச்சை...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
கொரோனா தடுப்பூசி தயாரிக்க செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்.!!!!
கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் : தமிழக அரசுக்கு உத்தரவு!!
மதுப்பிரியர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.!!!!
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கிவிட்டதாக உயர்நீதிமன்றம் வேதனை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!