ஆன்லைன் வர்த்தகத்தில் 35 லட்சம் கடன் காருக்குள் விஷம் குடித்து தொழிலதிபர் தற்கொலை
2021-01-22@ 00:19:38

தக்கலை: குமரி மாவட்டம் மஞ்சாடிகோணத்திில் ஒரு கார் நின்றதை நேற்று காலை தோட்ட தொழிலாளர்கள் பார்த்தனர். அதில் வாலிபர் ஒருவர் படுத்த நிலையில் கிடந்தார். அருகில் மது பாட்டில், உணவு பொருட்கள் இருந்தன. இது குறித்து தகவலறிந்து தக்கலை போலீசார் வந்து பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் மடத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (36) என்றும், அவரது மனைவி வனஜா, 7, 5 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வெல்டிங் தொழிலில் கொரோனா காரணமாக பாதிப்பு ஏற்பட்டதால் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ரூ.35 லட்சத்துக்கு் கடன் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் சில மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் தேங்காப்பட்டணம் சென்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
தடுப்பணை மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ள அவலம்; கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வீணாகும் மழை வெள்ளம்: நிரந்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ஆந்திர வனப்பகுதிகளில் கோடை மழையால் மோர்தானா அணை நிரம்பி பெரிய ஏரிக்கு செல்லும் உபரிநீர்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
குவாரியில் சிக்கியவர்களை மீட்க துரித நடவடிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களோடு வந்து கதறி அழுத பெண்கள்
வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது
கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து கிடைக்கும் தாழிகள்: ஆய்வாளர்கள் ஆச்சரியம்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!