புனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து...! 5 பேர் உயிரிழப்பு: சீரம் நிறுவனத்தின் சிஇஓ இரங்கல்
2021-01-21@ 19:24:20

புனே: புனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் தற்போது கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடும்போராட்டத்திற்குப்பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஆனால், கட்டுமானம் நடந்து வந்த இடத்தில் ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறியால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது என புனே மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீரம் நிறுவனத்தின் சிஇஓ-வும் உரிமையாளருமான ஆதார் பூனவல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் தீ விபத்தால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் எந்த பாதிப்பும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்
பிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு
திருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்
கொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.!!!
நாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்!!
விவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது!: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..!!
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்