மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை: போக்குவரத்து பாதிப்பு
2021-01-21@ 14:23:15

குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் சாலை இடிந்து தடுப்புகள் அந்தரத்தில் தொங்குகிறது.குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் காட்டேரி முதல் மரப்பாலம் வரை சாலையின் குறுகலான இடங்களில் விரிவாக்க பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மரப்பாலம் பகுதியில் பொக்லைன் உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் மண் அகற்றி வந்துள்ளனர். நள்ளிரவில் திடீரென மண்சரிவால் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. சாலையின் தடுப்புகள் அந்தரத்தில் தொங்கிவருகிறது. இதனால் அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையின் ஒரு பகுதியை தடை செய்து ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இடிந்த சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வட மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.100 கோடி ரேயான் துணிகள் தேக்கம்
கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் நோட்டு, புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் ஓராண்டாக முடக்கம்
சேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு
தென்காசி வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகள் கொண்ட கன்டெய்னர்: திமுகவினர் புகாரால் அகற்றம்
அதிமுக மாஜி அமைச்சர் காலமானார்
மதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்