மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..!!
2021-01-21@ 12:42:34

டெல்லி: காலியாக உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்ப கலந்தாய்வை மேலும் ஒருவாரம் நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது. மருத்துவ மேற்படிப்பில் அரசு கல்லூரிகளில் 5 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 112 இடங்களும் காலியாக இருக்கின்றன என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. மெடிக்கல், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் என்பது இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது.
குறிப்பாக அரசு கல்லூரிகளில் 5 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 112 இடங்களும் என மொத்தம் 117 இடங்கள் காலியாக உள்ளது. பி.டி.எஸ். என்று சொல்லக்கூடிய பல் மருத்துவத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் 12 இடங்களும், தனியார் மருத்துவமனைகளில் 447 இடங்களும் காலியாக இருக்கிறது. இதனை நிரப்ப காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே மேலும் ஒருவாரம் மீண்டும் கலந்தாய்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று மாலை அவசர வழக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதியுடன் மருத்துவ கலந்தாய்வு நிறைவடைந்துவிட்ட நிலையில், ஏராளமான மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் பலனடைய வேண்டி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேலும் செய்திகள்
22 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ள நிலையில் மருத்துவ ‘ஆக்சிஜன்’ சிலிண்டர் விலை 600% உயர்வு: பற்றாக்குறையை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை..!
கொரோனா பாதிப்பு எதிரொலி: ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை அவசரதேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து அமைப்பு அனுமதி..!
புத்தக வாசிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி!: உலக புத்தக தினத்தை முன்னிட்டு அமேசான் கிண்டிலில் சலுகைகள் அறிவிப்பு..சலுகை விலையில் சந்தா; ஆடியோ புத்தகங்கள் இலவசம்..!!
ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தெரியாம எடுத்துட்டேன்..! மன்னிச்சுக்கோங்க..! தடுப்பூசி என தெரியாது: திருடிய கொரோனா தடுப்பூசிகளை கடிதத்துடன் திருப்பி வைத்து சென்ற திருடன்
மே, ஜூன் மாதத்திற்கு தலா 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகம்: பிரதமர் மோடி அறிவிப்பு
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!