நடுவானில் மூச்சு திணறல் 7 வயது உபி சிறுமி பலி
2021-01-21@ 02:48:26

நாக்பூர்: உபி மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்குச் நேற்று முன்தினம் சென்ற கோ ஏர் விமானத்தில், உபி.யைச் சேர்ந்த ஆயுஷி என்ற சிறுமி தனது தந்தையுடன் பயணித்தார். விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே ஆயுஷிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவசரமாக நாக்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் சிறுமியின் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘ரத்தத்தில் ஒருவருக்கு சராசரியாக 12 கிராமுக்கும் அதிகமாக ஹிமோகுளோபின் இருக்க வேண்டும்.
10 கிராமுக்கும் குறைவாக ஹிமோகுளோபின் இருந்தால் அது ரத்த சோகையாக வரையறுக்கப்படுகிறது. இவர்களுக்கு விமான பயணத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம் என்பதால், விமான நிறுவனங்கள் பயணம் செய்ய அனுமதிக்காது. அதிலும், ஆயுஷிக்கு 2.5 கிராம் என்ற மிக மோசமான ஹிமோகுளோபின் குறைபாடு இருந்துள்ளது. அவரது உயிரிழப்புக்கு இதுவே காரணம்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலை உயர்வு: எம்எல்ஏ சீனிவாசகவுடா குற்றச்சாட்டு
ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் சங்கம் அமைக்க வேண்டும்: வட்டார கல்வி அதிகாரி வேண்டுகோள்
ஆலங்கட்டி மழையால் உதிர்ந்த திராட்சைகள்: ஒயின் தயாரிப்பில் பின்னடைவு
கல்வி, விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்: மாணவர்களுக்கு எம்எல்ஏ ஆலோசனை
நியாயம் கிடைக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்வது அவசியம்: மத்திய அரசு நோட்டரி பேச்சு
பிஇஎம்எல் தொழிலாளர்களின் தொடர் தர்ணா போராட்டம்:எம்எல்ஏ நாராயணசாமி ஆதரவு
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!