7 சாலைகள் மறுசீரமைப்பு பணி 2 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு
2021-01-21@ 01:46:50

புதுடெல்லி: தலைநகரில் மறுவடிவமைக்கப்பட்டு வரும் ஏழு சாலைகளின் திட்டப்பணிகளை குறிப்பிட்ட இரண்டு ஆண்டு காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் ஏற்கனவே உள்ள சாலைகளின் அருகில் உள்ள திறந்தவெளி பகுதிகளையும் உள்ளடக்கி மறுவடிமைப்பு செய்யும் பணிக்கு டெல்லி அரசு கடந்த 2019ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஒவ்வொரு சாலையும் 100 அடி அகலம் கொண்ட ஏழு சாலைகள் சுமார் 540 கிமீ தூரத்திற்கு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சாலைகளின் மறுவடிவமைப்பு திட்டப்பணிகள் குறித்து முதல்வர் கெஜ்ரிவால் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி ஆய்வு செய்தார். அப்போது, இந்த ஏழு சாலைகளின் திட்ப்பணிகளை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மறுவடிமைப்பு செய்யப்பட்டும் இந்த ஏழு சாலைகளில் பசுமை வழித்தடம், சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகளுக்கு தனி வழித்தடம், சாலையை ஒட்டிய சுவர்களில் ஈர்க்கும் விதத்திலான வடிவமைப்பு, திறந்தவெளி பூங்கா, ஆட்டோ மற்றும் இ-ரிக்ஷாக்களை நிறுத்த பார்க்கிங்கிற்கு தனி இடவசதி உள்ளிட்டவையும் இந்த மறுவடிவமைப்பில் இடம்பெற உள்ளது. இந்த சாலை மறுவடிவமைப்பு பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்னைகள் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதல் நோக்கம் மற்றும் முன்னுரிமை என்பது, இலகுவான வாகன போக்குவரத்து சீராக செல்ல வேண்டும் என்பது தான். இரண்டாவது நோக்கம், சாலையை ஒட்டியுள்ள திறந்தவெளி இடங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதாகும். இதில், மோட்டார் வாகனங்கள், மோட்டார் அல்லாத வாகனங்கள், பாதசாரிகளுக்கான சாலை என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நிலையான உயரத்திற்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள பாதைகள் பாதசாரிகளின் வசதிக்காக சராசரியாக 10 அடி அகலமாக இருக்கும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
7 roads restoration work 2 years to be completed by Chief Minister Kejriwal 7 சாலைகள் மறுசீரமைப்பு பணி 2 ஆண்டு முடிக்க முதல்வர் கெஜ்ரிவால்மேலும் செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதில் பாரபட்சம் குஜராத்துக்கு 1200 மெட்ரிக் டன் ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
ரூ.300 டிக்கெட்டில் 90 நாட்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை நாடாளுமன்ற அவசர கூட்டத்தைக் கூட்டுங்கள்
மோடி பதவி விலக கோரி ஹேஷ்டேக்: டிரெண்டிங்கில் நம்பர் 1
கொரோனா வைரசுக்கு எதிராக இரட்டை மாஸ்க் தரும் இரட்டிப்பு பாதுகாப்பு: ஆய்வில் தகவல்
மின் வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெறும்: நிதின் கட்கரி நம்பிக்கை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!