டெய்லர் வீட்டில் 15 சவரன் கொள்ளை
2021-01-21@ 00:54:43

பட்டாபிராம்: பட்டாபிராம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (57). டெய்லர். இவரது மனைவி சரளா (50). கூலித்தொழிலாளி. இவர்களுடன் விநாயகத்தின் தாய் எல்லம்மாள் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை விநாயகம் டெயலர் கடைக்கு சென்றுவிட்டார். சரளாவும் வேலைக்கு சென்றுவிட்டார். எல்லையம்மாள் மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று உள்ளார். வீட்டு சாவியை அங்கே ஒரு இடத்தில் மறைத்து வைத்து சென்றுள்ளார். பின்னர், எல்லையம்மாள் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் இருந்து 15 சவரன் கொள்ளை போனது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
போக்சோவில் வாலிபர் கைது
சொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை 2 ஆண்டுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது
வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, தங்கள் வசம் கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியர் கைது: உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வலை
காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது
கூடுதல் நேரம் திறந்து விற்பனை மதுபான கடை மேலாளர் உட்பட 2 பேர் கைது
பாஜ எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் மோதல் ஒருவர் சுட்டுக் கொலை ஒருவர் அடித்து கொலை